Kadavulum Prabanjamum - Tapa blanda

Singaravelu, M.

 
9798881359478: Kadavulum Prabanjamum

Sinopsis

சென்ற வருடம் நமது தோழர் ஈ. வெ. இராமசாமி அவர்கள், " குடி அரசு" க்கு மத சம்பந்தமாக செய்துள்ள விஞ்ஞான ஆராய்ச்சிகளின் முடிவினை சில வியாசமாக எழுதக் கேட்டுக்கொண்டனர். நமது அசௌக்கியத்தினிமித்தம், அவர் வேண்டுகோளுக் கிணங்க முடியாமற் போயிற்று. சென்ற இரண்டொரு வருஷங்களில் பிரபஞ்சத்தைப்பற்றிச் சில நவீன நூல்கள் பிரசுரிக்கப்பட்டன. "கடவுளும் பிர பஞ்சமும்" என்ற ஓர் நூல், பகுத்தறிவுச் சங்கத்தைச் சேர்ந்தவராகிய "கோகன்" என்ற பெரியார், மத அனுகூலமாக எழுதின சில விஞ்ஞான நிபுணர்களைக் கண்டித்து எழுதியுள்ளார். இந்த நூலில், மதங்களுக்கு, விஞ்ஞான விசாரணையின்படி ஆதரவு கிடைக்க வழியில்லை யென்று பொதுவாகக் காட்டியுள்ளதே யொழிய, விஞ்ஞான விசா ரணையில் கண்டுபிடிக்கப்பட்ட உறுதியான விஷயங்களைக் கொண்டு, மதங்களுக்கு ஆதாரச் சொல்லாகிய கடவுளை விசாரிக்கப் புகுந்தாரில்லை. பல நாஸ்திக வாதங்களும், கேவல (Abstract) வாதங்களாகவே இருந்து வருகின்றன. இந்த சமயத்தில், பிரபஞ்சத்தைப் பற்றி பலவித ஆராய்ச்சிகளின் பலனாக சிற்சில விருத்தாந்தங்கள் புதிதாக தெரிய வந்தன. இந்த விருத்தாந்தங்களைக் கொண்டு, கடவுள் இருப்பை விசாரிக்கத் தொடங்கி, அதன் முடிவுகளை "கடவுளும் பிரபஞ்சமும்" என மகுடமிட்டு " குடி அரசில் " எழுதிவந்தோம். இந்தக் கட்டுரைகளைப் புத்தக ரூபமாக அமைக்கும்படி சுயமரியாதைத் தோழர்கள் செய்த ஏற்பாடு மிகவும் களிக்கத்தக்கதே. "குடி அரசு" பிரசுரங்களில் ஒன்றாக இச்சிறு புத்தகத்தைப் பதிப்பிக்கச் செய்தது போற் றத்தக்கதாகும்.

"Sinopsis" puede pertenecer a otra edición de este libro.